மறுபிரதியெடுத்தலின் நிகழிடைவெளி
எவ்வளவு அடிக்கடி நீங்கள் மறுபிரதியெடுக்க வேண்டும் என்பது நீங்கள் மறுபிரதியெடுக்கும் தரவின் வகையைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக சேவையக கணினிகளில் மிக முக்கியமான தரவுகளைக் கொண்ட ஒரு பிணைய சூழலைக் கொண்டிருக்கிறீர்கள் எனில், நீங்கள் தினசரி மறுபிரதியெடுப்பது கூட போதாது என்றே கூறலாம்.
இது ஒரு புறமிருக்க, நீங்கள் உங்கள் வீட்டு கணினியில் உள்ள தரவை மறுபிரதியெடுக்கிறீர்கள் எனில், மணிக்கொரு முறை மறுபிரதியெடுப்பது தேவையாக இருக்கலாம். உங்கள் மறுபிரதியெடுப்பு நேரத்திட்டத்தை உருவாக்கும் போது பின்வரும் விஷயங்களை கருத்தில் கொள்வது உதவியாக இருக்கும்:
உங்கள் கணினியில் நீங்கள் செலவழிக்கும் நேரம்.
உங்கள் கணினியில் உள்ள தரவு எவ்வளவு அடிக்கடி மற்றும் எவ்வளவு மாற்றமடைகின்றது.
நீங்கள் மறுபிரதியெடுக்க விரும்பும் தரவு இசை, மின்னஞ்சல் மற்றும் குடும்ப புகைப்படங்கள் போன்று அதிக முக்கியத்துவம் இல்லாத அல்லது மிகக் குறைந்த மாற்றங்களே செய்யப்படும் தரவாக இருந்தால் வாரம் அல்லது மாதம் ஒரு முறை மறுபிரதியெடுப்பதே போதுமானதாக இருக்கும். இருப்பினும்வரி தணிக்கை நடைபெறும் காலம் போன்ற முக்கிய நேரங்களில் அடிக்கடி மறுபிரதியெடுக்க வேண்டி இருக்கலாம்.
ஒவ்வொரு மறுபிரதியெடுக்கும் செயலுக்கும் இடையே உள்ள நேரமானது, நீங்கள் செய்த ஏதேனும் வேலை இழக்கப்பட்டால், அதை மீண்டும் செய்ய நீங்கள் செலவழிக்க வேண்டிய நேரத்தின் அளவை விட அதிகமாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை ஒரு பொதுவான விதியாகக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக இழக்கப்பட்ட ஒரு ஆவணத்தை மீண்டும் எழுத உங்களுக்கு சுமார் ஒரு வாரம் ஆகும் எனில், நீங்கள் வாரம் ஒரு முறை மறுபிரதியெடுக்க வேண்டும்.