மடிக்கணினி விசிறி எப்போதும் இயங்குகிறது
உங்கள் மடிக்கணினியின் குளிர்விக்கும் விசிறி எப்போதுமே இயங்கிக் கொண்டிருந்தால், உங்கள் மடிக்கணினியின் குளிர்விக்கும் அமைப்பைக் கட்டுப்படுத்தும் வன்பொருள் Linux இல் நன்றாக ஆதரிக்கப்படாமல் இருக்கலாம். சில மடிக்கணினிகளுக்கு அவற்றின் குளிர்விக்கும் விசிறிகளை சிறப்பாகக் கட்டுப்படுத்த கூடுதல் மென்பொருள் தேவைப்படலாம், ஆனால் இந்த மென்பொருள் நிறுவப்படாதிருக்கலாம் (அல்லது Linux க்கு அவை கிடைக்காமல் இருக்கலாம்) அதனால் விசிறி எப்போதுமே முழு வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கலாம்.
இச்சூழ்நிலையில், நீங்கள் சில அமைவுகளை மாற்றலாம் அல்லது விசிறியை முழுமையாக கட்டுப்படுத்தும் கூடுதல் மென்பொருளை நிறுவலாம். உதாரணமாக சில Sony VAIO மடிக்கணினிகளின் விசிறிகளைக் கட்டுப்படுத்த vaiofand ஐ நிறுவலாம். இந்த மென்பொருளை நிறுவுவது அதிக தொழில்நுட்ப செயலாகும், இது உங்கள் மடிக்கணினியின் நிறுவனம் மற்றும் மாடலைப் பொறுத்தே அமையும், ஆகவே உங்கள் கணினிக்கு இதை எப்படி செய்ய வேண்டும் என்ற சரியான அறிவுரையைப் பெறுவது நல்லது.
உங்கள் மடிக்கணினி அதிக வெப்பத்தை உண்டாக்கவும் வாய்ப்புள்ளது. அதற்காக அது அதிக வெப்பமாகிறது என்று நினைக்க முடியாது; அதை போதிய அளவு குளிர்ச்சியாக வைக்க விசிறி எப்போதும் முழு வேகத்தில் இயங்க வேண்டி இருக்கலாம். இப்படி நடந்தால், உங்களுக்கு விசிறியை எப்போதும் முழு வேகத்தில் இயங்காமல் தடுக்க பெரிதாக வேறு வழிகள் எதுவும் இல்லை. கூடுதல் குளிர்விப்பு கருவிகளை வாங்கினால் அவை உதவுக்கூடும்.