எதை மறுபிரதியெடுப்பது

Praveen Kumar Lords Manickavasakam Chinnaiah

உங்கள் தனிப்பட்ட கோப்புகள்

ஆவணங்கள், விரிதாள்கள், மின்னஞ்சல், நாள்காட்டி சந்திப்புத் திட்டங்கள், நிதி தரவுகள், குடும்ப புகைப்படங்கள் அல்லது இழக்க முடியாது என நீங்கள் கருதும் தனிப்பட்ட கோப்புகள் எதுவும் இதில் உள்ளடங்கும்.

உங்கள் தனிப்பட்ட அமைப்புகள்

உங்கள் பணிமேசையில் நீங்கள் நிறங்கள், பின்புலங்கள், திரை தெளிவுத்திறன் மற்றும் சொடுக்கி அமைவுகள் ஆகியவற்றில் செய்யும் மாற்றங்கள் இதிலடங்கும். இதில் LibreOffice, உங்கள் இசை இயக்கி மற்றும் உங்கள் மின்னஞ்சல் பயன்பாடு ஆகியவை போன்ற பயன்பாடுகளின் முன்னுரிமைகளும் அடங்கும். இவை இடமாற்றக்கூடியவை, ஆனால் மீண்டும் உருவாக்க சற்று நேரம் எடுக்கும்.

கணினி அமைவுகள்

பெரும்பாலானோர் நிறுவலின் போது உருவாக்கப்படும் கணினி அமைவுகளை மாற்றுவதில்லை. ஏதேனும் காரணத்திற்காக நீங்கள் உங்கள் கணினி அமைவுகளை தனிப்பயனாக்கம் செய்தால், அல்லது உங்கள் கணினியை நீங்கள் சேவையகமாக பயன்படுத்தினால், இந்த அமைவுகளை நீங்கள் மறுபிரதியெடுக்க விரும்பலாம்.

நிறுவப்பட்ட மென்பொருள்

கணினியில் தொடர்ச்சியான சிக்கல்கள் ஏற்பட்ட பிறகு நீங்கள் மீண்டும் நிறுவுவதன் மூலம் விரைவில் மீட்டமைக்கக்கூடிய மென்பொருள்.

பொதுவாக, இடமாற்ற முடியாத கோப்புகளையும், மறுபிரதி இல்லாவிட்டால் மீண்டும் உருவாக்க மிக அதிக நேரம் தேவைப்படுகின்ற கோப்புகளையும் நீங்கள் மறுபிரதி எடுத்துக்கொள்வது சிறப்பு. மீண்டும் பெறுவது எளிது எனில், அவற்றை மறுபிரதி எடுத்து உங்கள் வட்டிடத்தை காலி செய்ய வேண்டியதில்லை.