மேல் நகர்வு சொடுக்கத்தை செயல்படுத்துதல்
திரையில் உள்ள ஒரு கட்டுப்பாடு அல்லது பொருளின் மீது உங்கள் சொடுக்கி சுட்டியை மேல் நகர்த்துவதன் மூலமே அவற்றை சொடுக்கவோ இழுக்கவோ முடியும். சொடுக்கியை ஒரே சமயத்தில் சொடுக்கியபடி இழுப்பது உங்களுக்கு சிரமமாக இருக்கும்பட்சத்தில் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த அம்சம் மேல் நகர்த்து சொடுக்கம் அல்லது ட்வெல் சொடுக்கம் எனப்படும்.
மேல்நகர்த்து சொடுக்கம் செயல்படுத்தப்பட்டிருக்கும் போது ஒரு கட்டுப்பாட்டின் மீது நீங்கள் உங்கள் சொடுக்கி சுட்டியை நகர்த்தி, சொடுக்கியிலிருந்து விலகிச் செல்ல விட்டு, உங்களுக்காக பொத்தான் சொடுக்கப்படும் வரை சற்று காத்திருக்கவும்.
Go to the desktop and start typing Accessibility.
Click Accessibility to open the panel.
Press Click Assist in the Pointing & Clicking section.
Switch Hover Click to on.
மேல் நகர்வு சொடுக்கம் சாளரம் திறக்கும், அது உங்கள் சாளரங்கள் அனைத்துக்கும் மேலாக இருக்கும். நீங்கள் சுட்டியை மேல் நகர்த்தும் போது எந்த வகையான சொடுக்கம் நடக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்க இந்த சாளரத்தைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் இரண்டாம் சொடுக்கம் என்பதைத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் சுட்டியை மேல்நகர்த்தும் போது வலது சொடுக்கம் செய்யப்படும். நீங்கள் இரு சொடுக்கம், வலது சொடுக்கம் அல்லது இழுத்தல் ஆகிய செயல்களைச் செய்த பிறகு, தானாக அது சொடுக்கத்திற்கு மாறும்.
நீங்கள் சொடுக்கியின் சுட்டியை ஒரு பொத்தானின் மேல்நகர்த்தி, அதை அசையாமல் வைத்திருக்கும் போது, அதன் நிறம் மெதுவாக மாறும். அதன் நிறம் முழுதும் மாறியதும் பொத்தான் சொடுக்கப்படும்.
சொடுக்கும் முன்பு நீங்கள் சொடுக்கியின் சுட்டியை எவ்வளவு நேரம் அசையாமல் வைத்திருக்க வேண்டும் என்பதை மாற்ற தாமதி அமைவை மாற்றவும்.
சொடுக்குவதற்காக சுட்டியை மேல்நகர்த்தும் போது நீங்கள் சொடுக்கியை சற்றும் அசையாமல் வைத்திருக்க வேண்டியதில்லை. சுட்டி சிறிதளவு நகர்ந்தாலும் சற்று நேரம் கழித்து சொடுக்கப்படும். இருப்பினும் அது மிக வேகமாக நகர்ந்தால் சொடுக்கப்படாது.
சுட்டி எவ்வளவு நேரம் அசைவதைப் பொறுத்துக்கொண்டு அது மேல்நகர்த்தப்படுவதாகக் கருதப்படலாம் என்பதை மாற்ற அசைவு வரம்பு அமைவை மாற்றவும்.