உங்கள் மடிக்கணினி பேட்டரியில் இருந்து சிறந்த பலன்களைப் பெறுங்கள்

மடிக்கணினி பழையதாகும் போது, அவற்றின் சார்ஜை சேமித்து வைக்கும் திறனும் படிப்படியாகக் குறைகிறது. அவற்றில் பயன்மிகு ஆயுட்காலத்தை அதிகரிக்க சில குறிப்புகள் இதோ, இருப்பினும் பெரிய வித்தியாசத்தை எதிர்பார்க்க முடியாது.

  • பேட்டரி முழுதும் தீர்ந்து போகும்படி விடாதீர்கள். பெரும்பாலான பேட்டரிகளில், பேட்டரி முழுதும் தீர்ந்து போவதைத் தடுக்கும் அம்சம் இருக்கிறது எனினும், பேட்டரி மிகவும் குறைந்து போகும் முன்பு ரிசார்ஜ் செய்யவும். பகுதியளவே பேட்டரி சார்ஜ் இறங்கியிருக்கும் போதே ரிசார்ஜ் செய்வது மிகச் சிறந்தது. ஆனால் சிறிதளவே சார்ஜ் இறங்கியிருக்கும் போது ரிசார்ஜ் செய்வது பேட்டரிக்குக் கெடுதலாகும்.

  • பேட்டரியின் சார்ஜ் ஆகும் செயல்திறனை வெப்பம் வெகுவாக பாதிக்கிறது. பேட்டரி இருக்க வேண்டிய அளவுக்கு அதிகமாக வெப்பமாக விடாதீர்கள்.

  • Batteries age even if you leave them in storage. There is little advantage in buying a replacement battery at the same time as you get the original battery — always buy replacements when you need them.

இது குறிப்பாக மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் (Li-Ion) பேட்டரிகளுக்கு பொருந்தும். மற்ற பேட்டரி வகைகள் வெவ்வேறூ நடத்தைகளால் நன்மை பெறக்கூடும்.