என் கணினியை இடைநிறுத்தும் போது என்ன நடக்கும்?

நீங்கள் கணினியை இடைநிறுத்தும் போது கணினி உறக்க நிலைக்குச் செல்கிறது. உங்கள் பயன்பாடுகள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் திறந்தபடியே இருக்கும், ஆனால் மின் சக்தியை சேமிப்பதற்காக திரையும் கணினியின் பிற பாகங்களும் அணைக்கப்படும். இருப்பினும் கணினி இயக்கத்திலேயே இருக்கும், ஆகவே சிறிதளவு மின்சாரத்தைப் பயன்படுத்தும். ஒரு விசையை அழுத்தி அல்லது சொடுக்கியை சொடுக்கி கணினியை விழித்தெழச் செய்யலாம். அது வேலை செய்யாவிட்டால் பவர் பொத்தானை அழுத்தவும்.

Some computers have problems with hardware support which mean that they may not be able to suspend properly. It is a good idea to test suspend on your computer to see if it does work before relying on it.

எப்போதும் இடைநிறுத்தும் முன்பு உங்கள் வேலையை சேமிக்கவும்

கணினியை இடைநிறுத்தும் முன்பு உங்கள் வேலைகள் அனைத்தையும் சேமிக்க வேண்டும், ஏதேனும் தவறாக நடந்து மீண்டும் கணினி தொடங்கும் போது திறந்திருந்த ஆவணங்கள் மற்றும் பயன்பாடுகள் மீட்கப்படாமல் போனால் இது பயன்படும்.