ஒரு புக்லெட்டை அச்சிடுதல்

ஒரு PDF இலிருந்து ஒரு புக்லெட்டை அச்சிடலாம்.

LibreOffice ஆவணத்திலிருந்து ஒரு புக்லெட்டை அச்சிட, முதலில் கோப்பு ▸ PDF ஆக ஏற்றுமதி செய்… ஐ தேர்வு செய்து அதை ஒரு PDF ஆக ஏற்றுமதி செய்யவும். உங்கள் ஆவணத்தின் பக்கங்களின் எண்ணிக்கை 4 இன் மடங்காக இருக்க வேண்டும் (4, 8, 12, 16,…). 3 வரையிலான காலி பக்கங்களைச் சேர்க்க வேண்டி இருக்கலாம்.

உங்கள் PDF ஆவணத்தில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை 4 இன் மடங்குகளாக இல்லாவிட்டால், பக்கங்களின் எண்ணிக்கை 4 இன் மடங்காக மாற்ற, தேவையான அளவு காலி பக்கங்களை சேர்க்க வேண்டும் (1,2 அல்லது 3). இதை நீங்கள் இப்படிச் செய்யலாம்:

  1. தேவையான எண்ணிக்கையிலான காலி பக்கங்களைக் கொண்ட ஒரு LibreOffice ஆவணத்தை உருவாக்கவும்.

  2. கோப்பு ▸ PDF ஆக ஏற்றுமதி செய்… என்பதை தேர்வு செய்து, காலி பக்கங்களை ஒரு PDF ஆக ஏற்றுமதி செய்யவும்.

  3. PDF-Shuffler அல்லது PDF Mod ஐப் பயன்படுத்தி, காலி பக்கங்களை கடைசியில் வைத்து காலி பக்கங்களை PDF ஆவணத்துடன் ஒன்றிணைக்கவும்.

கீழே உள்ள பட்டியலில் இருந்து நீங்கள் பயன்படுத்தப்போகும் அச்சுப்பொறி வகையைத் தேர்ந்தெடுக்கவும்: