ஒரு சாளரத்தை பெரிதாக்குதல் மற்றும் பெரிதாக்கல் நீக்குதல்
ஒரு சாளரம் பணிமேசை முழுவதும் அடைத்துக் கொள்ளும் வண்ணம் அதை பெரிதாக்கலாம், அதன் வழக்கமான அளவுக்கு மீட்டமைக்கலாம். திரையின் இடப்புறமாக செங்குத்தாகவும் சாளரங்களைப் பெரிதாக்கலாம், இதன் மூலம் நீங்கள் இரண்டு சாளரங்களை ஒரே சமயத்தில் பார்க்கலாம். விவரங்களுக்கு சாளரங்களை ஒன்றன் பின் ஒன்றாக அமைத்தல் ஐப் பார்க்கவும்.
ஒரு சாளரத்தை பெரிதாக்க, அதன் தலைப்புப் பட்டியைப் பிடித்து அதை திரையின் மேலே இழுத்துச் செல்லவும் அல்லது தலைப்புப் பட்டியை இரு சொடுக்கவும். விசைப்பலகையைப் பயன்படுத்தி ஒரு சாளரத்தைப் பெரிதாக்க Super விசையை அழுத்திக் கொண்டு ↑ ஐ அழுத்தவும் அல்லது Alt+F10 ஐ அழுத்தவும்.
ஒரு சாளரத்தை பெரிதாக்காத அளவுக்கு மீட்டமைக்க, அதை திரையின் விளிம்பில் இருந்து விலக்கி இழுத்து வரவும். சாளரம் முழுவதும் பெரிதாக்கப்பட்டிருந்தால், அதை மீட்டமைக்க தலைப்புப் பட்டியில் இரு சொடுக்கலாம். பெரிதாக்கப் பயன்படுத்திய அதே விசைப்பலகைக் குறுக்குவழிகளையும் பயன்படுத்தலாம்.
Hold down the Super key and drag anywhere in a window to move it.