என் கேமராவை எப்படி அளவை வகுப்பது?

விரும்பும் ஒளியமைப்புகளில் ஒரு புகைப்படம் எடுப்பதன் மூலம் கேமரா சாதனங்களை அளவை வகுக்கிறோம். RAW கோப்பை TIFF கோப்பாக மாற்றி அந்தக் கோப்பைப் பயன்படுத்தி நிற கட்டுப்பாட்டுப் பலகத்தில் கேமரா சாதனத்தை அளவை வகுக்கலாம்.

இலக்கு புலப்படும்படி இருப்பதற்காக நீங்கள் TIFF கோப்பை செதுக்க வேண்டியிருக்கும். வெள்ளை அல்லது கருப்பு கரைகள் புலப்படும்படி இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும். படம் தலைகீழாகவோ அதிக அளவு இழுவையாக்கப்பட்டோ இருந்தால் அளவை வகுக்க முடியாது.

இதிலிருந்து கிடைக்கும் தனியமைப்பானது, நீங்கள் அசல் படத்தை படம்பிடிக்கையில் என்ன ஒளியமைப்பு இருந்ததோ அதில் மட்டுமே செல்லுபடியாகும். அதாவது ஸ்டுடியோ, பிரகாசமான சூரிய ஒளி மற்றும் மேகமூட்டம் ஆகிய ஒளியமைப்புகளுக்கு நீங்கள் பல முறை தனியமைப்பை உருவாக்க வேண்டியிருக்கும்.