என் அச்சுப்பொறியை எப்படி அளவை வகுப்பது?

அச்சு சாதனத்திற்கு தனியமைப்பை உருவாக்க இரு வழிகள் உள்ளன:

  • Pantone ColorMunki போன்ற ஃபோட்டோஸ்பெக்ட்ரோமீட்டர் சாதனம் ஒன்றைப் பயன்படுத்தி செய்யலாம்

  • Downloading a printing reference file from a color company

உங்களிடம் ஒன்று அல்லது இரண்டு வகை தாள்கள் மட்டுமே உள்ளது எனில், ஒரு நிற நிறுவனத்தைப் பயன்படுத்தி அச்சுப்பொறி தனியமைப்பை உருவாக்குவதே மலிவான வழியாகும். நிறுவன வலைத்தளத்திலிருந்து குறிப்பு அட்டவணையை இறக்குமதி செய்து பிறகு உங்கள் அச்சுகளை அவர்களுக்கு அட்டையமைப்புள்ள உறைகளில் வைத்து அனுப்பினால், அவர்கள் தாள்களை ஸ்கேன் செய்து தனியமைப்பை உருவாக்கி உங்களுக்கு துல்லியமான ICC தனியமைப்பை மின்னஞ்சலில் அனுப்புவார்கள்.

உங்களிடம் அதிக எண்ணிக்கையிலான இங்க் தொகுப்புகள் அல்லது தாள் வகைகள் இருக்கும்பட்சத்தில் மட்டுமே ColorMunki போன்ற விலை அதிகமான சாதனத்தைப் பயன்படுத்துவது மலிவான வழியாக இருக்கும்.

உங்கள் இங்க் சப்ளையரை நீங்கள் மாற்றினால், மீண்டும் அச்சுப்பொறியை அளவை வகுக்க மறந்துவிட வேண்டாம்!