மின்னஞ்சல் பட்டியல்

அஞ்சல் பட்டியல்கள் என்பவை மின்னஞ்சல் மூலமான கலந்துரையாடல்களாகும். நீங்கள் GNOME அஞ்சல் பட்டியல்களைப் பயன்படுத்தி ஆதரவு கேட்க முடியும். கிட்டத்தட்ட ஒவ்வொரு GNOME பயன்பாட்டுக்கும் என ஒரு தனி அஞ்சல் பட்டியல் இருக்கும். அஞ்சல் பட்டியல்களின் முழுமையான பட்டியலை இங்கு காணலாம்: http://mail.gnome.org/mailman/listinfo

நீங்கள் ஒரு அஞ்சல் பட்டியலுக்கு அஞ்சல் அனுப்ப வேண்டுமானால் அதற்கு முன் அந்த பட்டியலுக்கு சந்தா பெற வேண்டும்.

அஞ்சல் பட்டியல்களில் பயன்படுத்தப்படும் முன்னிருப்பு மொழி ஆங்கிலமாகும். பிற மொழிகளுக்கு பயனர் அஞ்சல் பட்டியல்களும் உள்ளன. உதாரணமாக, ஜெர்மன் மொழியினருக்கென gnome-de என்ற பட்டியலும் சிலி தொடர்பான பேச்சுகளுக்கு gnome-cl-list என ஒரு பட்டியலும் உள்ளது.