மெனு விசை என்பது என்ன?
மெனு விசை என்பது சில Windows சார்ந்த விசைப்பலகைகளில் காணப்படும் ஒரு விசையாகும், இது பயன்பாடு விசை என்றும் அழைக்கப்படும் இந்த விசை வழக்கமாக விசைப்பலகையின் கீழே வலது பக்கத்தில் Ctrl விசைக்கு அடுத்ததாக இருக்கும், ஆனால் விசைப்பலகை உற்பத்தி நிறுவனங்களால் அதை வேறு இடத்தில் வைக்க முடியும். வழக்கமாக இந்த விசையில் ஒரு மெனுவுக்கு மேல் ஒரு சுட்டி இருப்பது போன்ற ஒரு சின்னம் இருக்கும்:
சொடுக்கி பொத்தானை சொடுக்காமல் விசைப்பலகை மூலமாக ஒரு சூழல் மெனுவைத் தோன்றச் செய்வதே இந்த விசையின் முக்கிய செயல்பாடாகும்: சொடுக்கி அல்லது அது போன்ற சாதனம் இல்லாதபட்சத்தில் இது மிக பயனுள்ளதாக இருக்கும், அல்லது வலது சொடுக்கி பொத்தான் இல்லாதபோதும் பயன்படும்.
சில நேரங்களில், குறிப்பாக சிறிய மற்றும் லேப்டாப் விசைப்பலகைகளில் இடத்தை மிச்சப்படுத்துவதற்காக மெனு விசை தவிர்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட விசைப்பலகைகள் சிலவற்றில், செயல்பாடு விசையுடன் (Fn) சேர்த்து பயன்படுத்தி செயல்படுத்தக்கூடிய ஒரு மெனு செயல்பாடு விசை இருக்கும்.
சூழல் மெனு என்பது வலது சொடுக்கும் போது மேல்தோன்றும் மெனுவாகும். அப்படிச் செய்யும் போது காண்பிக்கப்படும் மெனுவானது நீங்கள் வலது சொடுக்கம் செய்த பகுதியின் சூழல் மற்றும் செயல்பாட்டைப் பொறுத்ததாகும். நீங்கள் மெனு விசையைக் கொண்டு சூழல் மெனுவை வரவழைக்கும் போது, அவ்விசையை நீங்கள் அழுத்திய போது சுட்டியானது திரையில் உள்ள அந்தப் பகுதிக்கான சூழல் மெனு காண்பிக்கப்படும்.