I can’t see my wireless network in the list
There are a number of reasons why you might not be able to see your wireless network on the list of available networks from the system menu.
பட்டியலில் எந்த பிணையமும் காட்டப்படாவிட்டால், உங்கள் வயர்லெஸ் வன்பொருள் அணைக்கப்பட்டிருக்கலாம் அல்லது அது சரியாக வேலை செய்யாதிருக்கலாம். அது இயக்கப்பட்டுள்ளதா எனப் பார்த்துக்கொள்ளவும்.
நீங்கள் பிணையத்தின் வரம்புக்கு வெளியே இருக்கலாம். வயர்லெஸ் பேஸ் ஸ்டேஷன்/ரௌட்டருக்கு அருகாமையில் சென்று சற்று நேரம் கழித்து அது பட்டியலில் வருகிறதா எனப் பார்க்கவும்.
வயர்லெஸ் பிணையங்களின் பட்டியல் புதுப்பிக்கப்பட சற்று நேரம் ஆகலாம். நீங்கள் உங்கள் கணினியை இயக்கி அல்லது வேறு இடம் மாறி சற்று நேரம் தான் ஆகிறது எனில் சில நிமிடம் காத்திருந்து பிறகு பிணையம் பட்டியலில் வருகிறதா எனப் பார்க்கவும்.
பிணையம் மறைக்கப்பட்டிருக்கலாம். பிணையம் மறைக்கப்பட்டிருந்தால் நீங்கள் வேறு வழியில் இணைக்க வேண்டும்.