விசைப்பலகை நகர்வு
சொடுக்கி அல்லது மற்ற சொடுக்க சாதனத்தைப் பயன்படுத்த முடியாதவர்களுக்காக அல்லது கூடுமானவரை சொடுக்கியைப் பயன்படுத்தாமல் விசைப்பலகையையே பயன்படுத்த விரும்புபவர்களுக்காக விசைப்பலகையைக் கொண்டு வழிசெலுத்துவது பற்றிய விவரங்களைக் கொடுக்கிறது. அனைத்து பயனர்களுக்கும் பயன்படக்கூடிய விசைப்பலகை குறுக்குவழிகளைக் காண பயனுள்ள விசைப்பலகை குறுக்குவழிகள் பார்க்கவும்.
நீங்கள் சொடுக்கி போன்ற ஒரு சுட்டு சாதனத்தைப் பயன்படுத்த முடியாது எனில், நீங்கள் உங்கள் விசைப்பலகையில் உள்ள எண் விசைப்பலகையைப் பயன்படுத்தி சொடுக்கி சுட்டியைக் கட்டுப்படுத்த முடியும். விவரங்களுக்கு Click and move the mouse pointer using the keypad ஐ பார்க்கவும்.
பயனர் இடைமுகத்தில் நகர்தல்
Tab and Ctrl+Tab |
பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே விசைப்பலகை கவனப்பகுதியை நகர்த்துதல். Ctrl+Tab ஒரு பக்கப்பட்டியில் இருந்து முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்லுதல் போன்ற கட்டுப்பாடுகளின் குழுக்களிடையே நகர்த்தும். Ctrl+Tab ஆனது ஒரு உரை பகுதி போன்ற Tab ஐப் பயன்படுத்தும் ஒரு கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறவும் முடியும். கவனப் பகுதியை எதிர்த்திசையில் நகர்த்த Shift ஐப் பிடித்துக்கொள்ளவும். |
அம்புக்குறி விசைகள் |
ஒரு ஒற்றை கட்டுப்பாட்டில் உருப்படிகளுக்கு இடையே தேர்வை நகர்த்துதல் அல்லது தொடர்புடைய கட்டுப்பாடுகளின் ஒரு தொகுப்பில் நகர்த்துதல். ஒரு கருவிப் பட்டியில் உள்ள பொத்தான்களில் கவனப் பகுதியை வைக்க அல்லது பட்டியல் அல்லது சின்னக் காட்சியில் உருப்படிகளைத் தேர்வு செய்ய அல்லது ஒரு குழுவிலிருந்து ஒரு ரேடியோ பொத்தானைத் தேர்ந்தெடுக்க அம்புக்குறி விசைகளைப் பயன்படுத்தவும். |
Ctrl+அம்புக்குறி விசைகள் |
பட்டியல் அல்லது சின்னக் காட்சியில், எந்த உருப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதோ அதிலிருந்து தேர்வை மாற்றாமல் விசைப்பலகை கவனப் பகுதியை மட்டும் மற்றொரு உருப்படிக்கு மாற்றுதல். |
Shift+அம்புக்குறி விசைகள் |
பட்டியல் அல்லது சின்னக் காட்சியில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படியிலிருந்து கவனப் பகுதி புதிதாக வைக்கப்பட்ட உருப்படி வரையுள்ள அனைத்து உருப்படிகளையும் தேர்ந்தெடுத்தல். In a tree view, items that have children can be expanded or collapsed, to show or hide their children: expand by pressing Shift+→, and collapse by pressing Shift+←. |
Space |
ஒரு பொத்தான், தேர்வுப் பெட்டி அல்லது பட்டியல் உருப்படி போன்ற ஒரு கவனப் பகுதி வைக்கப்பட்டுள்ள உருப்படியை செயல்படுத்துதல். |
Ctrl+Space |
பட்டியல் அல்லது சின்னக் காட்சியில், மற்ற உருப்படிகளைத் தேர்வு நீக்காமல் கவனப் பகுதி வைக்கப்பட்டுள்ள உருப்படியை தேர்தெடுத்தல் அல்லது தேர்வு நீக்குதல். |
Alt |
குறுக்குவிசைகளை தெரியப்படுத்த Alt விசையைப் பிடிக்கவும்: மெனு உருப்படிகள், பொத்தான்கள் மற்றும் பிற கட்டுப்பாடுகளின் பெயர்களில் அடிக்கோடிட்ட எழுத்துகளே குறுக்குவிசைகளாகும். ஒரு கட்டுப்பாட்டை சொடுக்கியதைப் போலவே அதனைச் செயல்படுத்த Alt விசையுடன் சேர்த்து அடிக்கோடிக்க எழுத்தையும் அழுத்தவும். |
Esc |
ஒரு மெனு, பாப்-அப், ஸ்விட்ச்சர் அல்லது உரையாடல் சாளரத்திலிருந்து வெளியேறுதல். |
F10 |
ஒரு சாளரத்தின் மெனுப்பட்டியின் முதல் மெனுவைத் திறத்தல். மெனுக்களிடையே செல்ல அம்புக்குறி விசைகளை பயன்படுத்தவும். |
Shift+F10 or |
தற்போதைய் தேர்ந்தெடுத்துள்ள உருப்படியை நீங்கள் வலது சொடுக்கம் செய்தால் வருவது போன்ற ஒரு பாப்-அப் சூழல் மெனு வரும். |
Ctrl+F10 |
கோப்பு மேலாளரில், நீங்கள் எந்த ஒரு உருப்படியின் மீதுமன்றி பின்புலத்தில் ஒரு இடத்தில் வலது சொடுக்கம் செய்தால் வருவதைப் போன்ற தற்போதைய கோப்புறைக்கான ஒரு சூழல் மெனு வரும். |
Ctrl+PageUp and Ctrl+PageDown |
தாவல்கள் உள்ள இடைமுகத்தில், இடப்புறம் அல்லது வலப்புறம் உள்ள தாவலுக்கு மாறுதல். |
பணிமேசையில் நகர்தல்
Alt+F1 or the Super key |
Switch between the Desktop and running applications. In the desktop, start typing to instantly search your applications, contacts, and documents. |
Super+Tab |
சாளரங்களுக்கிடையே விரைவாக மாறுதல். எதிர்த்திசையில் மாற Shift ஐப் பிடித்துக்கொள்ளவும். |
Super+` |
ஒரே பயன்பாட்டின் வெவ்வேறு சாளரங்களிடையே மாற அல்லது தேர்ந்தெடுத்த பயன்பாட்டுக்குப் பிறகு மாற Super+Tab. இந்த குறுக்குவழி US விசைப்பலகைகளில் ` ஐப் பயன்படுத்துகிறது, இவற்றில் ` விசைTab க்கு மேல் உள்ளது. மற்ற விசைப்பலகைகளில் Super மற்றும் Tab க்கு மேலே உள்ள விசை ஆகிய இரண்டின் சேர்க்கையே குறுக்குவழியிஆகும். |
Ctrl+Alt+Tab |
Give keyboard focus to the taskbar. In the Desktop, switch keyboard focus between the taskbar and the windows. Use the arrow keys to navigate. |
Alt+F6 |
ஒரே பயன்பாட்டுக்குள் அமைந்த சாளரங்களிடையே தொடர்ந்து மாறுதல். நீங்கள் விரும்பும் சாளரம் தனிப்படுத்திக் காண்பிக்கப்படும் வரை Alt விசையைப் பிடித்துக்கொண்டுF6 ஐ அழுத்தவும், பிறகு Alt ஐ விடவும். இது Alt+` அம்சத்தைப் போன்றதே. |
Alt+Esc |
ஒரு பணியிடத்தில் திறந்துள்ள அனைத்து சாளரங்களிடையே மாறுதல். |
Super+V |
Open the notification list. Press Esc to close. |
சாளரங்களில் வழிசெலுத்த
Alt+F4 |
தற்போதைய சாளரத்தை மூடுதல். |
Alt+F5 அல்லது Super+↓ |
Restore a maximized window to its original size. Use Alt+F10 to maximize. Alt+F10 both maximizes and restores. |
Alt+F7 |
தற்போதைய சாளரத்தை நகர்த்துதல். Alt+F7 ஐ அழுத்தி பிறகு, சாளரத்தை நகர்த்த அம்புக்குறி விசைகளைப் பயன்படுத்தவும். சாளரத்தை நகர்த்துவதை முடிக்க Enter ஐ அழுத்தவும் அல்லது முன்பிருந்த இடத்தில் அதை திரும்ப வைக்க Esc ஐ அழுத்தவும். |
Alt+F8 |
தற்போதைய சாளரத்தை அளவு மாற்றுதல். Alt+F8 ஐ அழுத்தி பிறகு சாளரத்தை அளவு மாற்ற அம்புக்குறி விசைகளைப் பயன்படுத்தவும். சாளரத்தை அளவு மாற்றுவதை முடிக்க Enter ஐ அழுத்தவும் அல்லது முதலில் இருந்த அளவுக்கே விட்டு விட Esc ஐ அழுத்தவும். |
Shift+Super+← |
Move the current window one monitor to the left. |
Shift+Super+→ |
Move the current window one monitor to the right. |
Alt+F10 அல்லது Super+↑ |
ஒரு சாளரத்தைப் பெரிதாக்குதல். பெரிதாக்கப்பட்ட ஒரு சாளரத்தை பழைய அளவுக்கே மீட்டமைக்க Alt+F10 அல்லது Super+↓ ஐ அழுத்தவும். |
Super+H |
ஒரு சாளரத்தை சிறிதாக்குதல். |
Super+← |
ஒரு சாளரத்தை திரையின் இடது பக்கவாட்டில் செங்குத்தாக பெரிதாக்குதல். முந்தைய அளவுக்கு மீட்டமைக்க மீண்டும் அதையே அழுத்தவும். பக்கங்களை மாற்ற Super+→ ஐ அழுத்தவும். |
Super+→ |
ஒரு சாளரத்தை திரையின் வலது பக்கவாட்டில் செங்குத்தாக பெரிதாக்குதல். முந்தைய அளவுக்கு மீட்டமைக்க அதையே மீண்டும் அழுத்தவும். பக்கங்களிடையே மாற Super+← ஐ அழுத்தவும். |
Alt+Space |
தலைப்புப் பட்டியில் வலது சொடுக்கினால் கிடைக்கும் சாளர பாப்-அப் மெனுவை வரவழைக்கும். |